தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் (SIR) உள்ள குளறுபடிகளை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் படி, கழக பொதுச்செயலாளர் திரு ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதல் படி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (16.11.2025) ஞாயிற்று கிழமை அன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு விஜய் சரவணன், தஞ்சை மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு R.ரமேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு நிஜாம், தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு வினோத் ரவி, தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு மதன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) கண்டித்தும், அதில் உள்ள குளறுபடிகளை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மத்திய, மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட, மாநகர, ஒன்றிய மற்றும் பகுதி பொறுப்பாளர்களும், சார்பு அணிகளான தகவல் தொழில் நுட்ப அணி ,மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அனைத்து சார்பு அணி பொறுப்பாளர்களும், தமிழக வெற்றிக் கழக தோழர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.

