
தஞ்சை மேற்கு மாவட்டம், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டலங்குடிகாடு கிராமத்தில், தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் திரு R.ரமேஷ் அவர்களின் தலைமையில், நேற்று ( 30/01/2026) நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில், மாற்று கட்சிகளில் இருந்து அனுபவம் வாய்ந்த பெரியோர்கள் மற்றும் எழுச்சி மிகு இளைஞர்கள் ஏராளமானோர் நமது கட்சியில் இணைந்து, இயக்கத்தின் கொள்கை, தலைமையமைப்பு மற்றும் மக்கள் சேவையில் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இது தஞ்சை மேற்கு மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
இந்த நிகழ்வில் மாவட்ட இணை செயலாளர் திரு பால்பாண்டி, மாவட்ட துணை செயலாளர் திரு ஆனந்த், மாவட்ட நிர்வாகிகள், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு மதன்ராஜ், ஒன்றிய இணை செயலாளர் திரு வெங்கடேஷ், ஒன்றிய பொருளாளர் திரு பிரகாஷ், ஒன்றிய துணை செயலாளர் திரு கௌதம், தொண்டரணி திரு சக்திவேல் உள்ளிட்ட ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொண்டு நிகழ்வை மேலும் பெருமைப்படுத்தினர்.
கட்சியின் வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக திட்டமிட்டு ஏற்பாடு செய்த ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் திரு சதீஷ் மற்றும் திரு மாணிக்கம் அவர்களுக்கு கட்சியின் சார்பில் உளமார்ந்த பாராட்டுகளும், நன்றிகளும் தெரிவித்துக்கொள்கிறோம்.
- தகவல் தொழில்நுட்ப அணி
தஞ்சை மேற்கு மாவட்டம்

