TVK Thanjavur west IT Wing

தஞ்சை மேற்கு மாவட்டம், தஞ்சை தென்கிழக்கு ஒன்றியம், விளார் பகுதியில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழா

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணையின் படி, கழகப் பொதுச்செயலாளர் திரு. N.ஆனந்த் அவர்களின் ஆலோசனைக்கிணங்க தஞ்சை மேற்கு மாவட்டம், தஞ்சை தென்கிழக்கு ஒன்றியம் விளார் ஊராட்சி சார்பாக 11.01.2026 அன்று மதியம் 2 மணியளவில் கழகக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட கழகச் செயலாளர் திரு. R.ரமேஷ் அவர்கள் தலைமையேற்று கழகக் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்கள். எனது பூத் தவெக பூத் கழக அலுவலகத்தையும் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் R. புவனேஸ்வரி, மாவட்ட துணை செயலாளர் S.ஆனந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் A. முத்தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வை தஞ்சை தென்கிழக்கு ஒன்றிய செயலாளர் ரஜினி, ஒன்றிய வர்த்தகஅணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பிரபாகர் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் A. லூர்து வின்சென்ட், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் A.அலெக்சாண்டர் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும், பொதுமக்களும் ஏராளமாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இறுதியாக கழக ஒன்றிய செயலாளர் ரஜினி நன்றியுரையாற்றினார்.

  • தகவல் தொழில்நுட்ப அணி
    தஞ்சை மேற்கு மாவட்டம்
Scroll to Top