UGC நிர்ணயித்த ஊதியத்தை கௌரவ விரிவுரையாளர்களும் வழங்க வேண்டும் , பெண் கௌரவ விரிவுரையாளர்களும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர்கள் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று ( 13/02/2026) தஞ்சை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தஞ்சை மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு ரமேஷ் அவர்கள் நேரில் சென்று போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்கள். இந்த நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் திரு ஆனந்த் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர்.

இறுதியாக போராட்ட குழுவின் சார்பில் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை போராட்ட குழுவை சார்ந்த ஆசிரியர்கள் மாவட்ட கழக செயலாளர் திரு ரமேஷ் அவர்களிடம் வழங்கினார்கள்.
தகவல் தொழில்நுட்ப அணி தஞ்சை மேற்கு மாவட்டம்

