TVK Thanjavur west IT Wing

தஞ்சை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் விருப்ப மனு பெற்றுக்கொள்ளப்பட்டது

தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

அந்த வகையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் விருப்ப மனுவை நேற்று ( 06.02.2026) மதியம் 12 மணியில் இருந்து சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் தஞ்சை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் R.ரமேஷ் அவர்களில் தலைமையில் வேட்பாளர் விருப்ப மனு நேற்று ( 06.02.2026) சென்னை பனையூரில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நகர பகுதி கழக பொறுப்பாளர்களும் சார்பு அணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் திரு K.சுதாகர் அவர்கள் கழக பொதுச்செயலாளர் திரு N. ஆனந்த் அவர்களிடம் இருந்து வேட்பாளர் விருப்ப மனு பெற்றுக்கொண்டார்.

தகவல் தொழில்நுட்ப அணி

தஞ்சை மேற்கு மாவட்டம்

Scroll to Top