தமிழக வெற்றிக் கழக தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொதுச்செயலாளர் திரு N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதல் படி தஞ்சை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கடந்த மார்ச் 1, 2026 மாலை 4 மணியளவில் ஒரத்தநாட்டில் அமைந்துள்ள SSV மஹாலில் நடைபெற்றது.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தஞ்சை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் திரு R. ரமேஷ் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் திரு P.பால்பாண்டி , மாவட்ட பொருளாளர் திருமதி R.புவனேஸ்வரி , மாவட்ட துணை செயலாளர்கள் திருமதி M.சிபிதா ,திரு K.S. ஆனந்த் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஒன்றிய செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் தேர்தல் பரப்புரை பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கழகத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகளை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தஞ்சை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக பொறுப்பாளர்களும் சார்பு அணி பொறுப்பாளர்களும், அனைத்து வாக்குச் சாவடி முகவர்களும் கலந்து கொண்டனர்.
தகவல் தொழில்நுட்ப அணி
தஞ்சை மேற்கு மாவட்டம்

