TVK Thanjavur west IT Wing

தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தஞ்சை மேற்கு மாவட்டம் சார்பில் இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம். தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருவோணம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரணிபுரத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு R.ரமேஷ் அவர்களின் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்று வழங்கியும் நம் கழகத்தின் வெற்றியின் சின்னமான விசில் சின்னத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பொதுமக்களுக்கு விசில் வழங்கப்பட்டது. இந்த சிறப்பான நிகழ்வில் தஞ்சை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் தஞ்சை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய கழக செயலாளர்கள் மாவட்ட சார்பணி அமைப்பாளர்கள், அனைத்து ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய சார்பு அணி அமைப்பாளர்கள் கிளைக் கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதனை தொடர்ந்து ஒரத்தநாடு நகரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்ஜியார் ஆகியோரின் சிலைகளுக்கு தஞ்சை மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு ரமேஷ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். மேலும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப அணி

தஞ்சை மேற்கு மாவட்டம்

Scroll to Top