TVK Thanjavur west IT Wing

தமிழக வெற்றிக் கழகம்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

எங்கள் தலைவர் தளபதி C.விஜய் பற்றி

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் தளபதி C. விஜய் அவர்கள் சமூக நீதி, அரசியல் மாற்றம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றம் குறித்த ஆழ்ந்த நம்பிக்கையுடன் செயல்படும் ஒரு துருவ நட்சத்திரம். மக்களுக்கான சேவையில் அவருக்கு உள்ள அனுபவமும், ஊழல் இல்லாத, நவீன தமிழ்நாடு உருவாக்கும் முயற்சிகளும் அவருக்கு தமிழகத்தின் பல்வேறு தரப்பில் உள்ள மக்களின் மதிப்பு மற்றும் மரியாதையை பெற்றுத்தந்துள்ளன.
தளபதி C. விஜய் அவர்களின் தலைமை சிறப்பம்சம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களை அதிகாரப்படுத்தவும், அனைவருக்கும் சமநிலை வாய்ந்த வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் உறுதியாக செயல்படுவதாகும். பொருளாதார சமநிலை, தரமான கல்வி, மற்றும் சீரான வேலைவாய்ப்புகளுக்கான வலியுறுத்தலுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். அவரது வழிகாட்டுதலின் கீழ், தமிழக வெற்றிக் கழகம் ஒரு வலுவான இயக்கமாக மாறி, அடிப்படை மட்டத்தில் மக்களை ஒன்றிணைக்கும் மற்றும் பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் கொள்கைகளை முன்னெடுத்து செயல்பட்டு வருகிறது.

அவருடைய நேர்மை, வெளிப்படை தன்மை மற்றும் ஒற்றுமையான நடவடிக்கைகளின் மீது உள்ள நம்பிக்கை, தளபதி C. விஜய் அவர்களை எதிர்கால தலைமுறைக்கு முன்னோடியாக மாற்றியுள்ளது. அவருடைய தமிழ்நாடு கனவு என்பது அனைத்து மக்களும் முன்னேறக் கூடிய, நன்மை அடையக் கூடிய, ஒற்றுமையான, வளர்ச்சியடையும் நவீன தமிழ்நாடு உருவாக வேண்டும் என்பதே ஆகும். தமிழக வெற்றிக் கழகம் மூலம், அவர் தமிழ்நாட்டின் அரசியல் களத்தை மாற்றும் நோக்கத்தில், நேர்மை, முன்னேற்றம், சமூக நீதி ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயல்படுகிறார். அவருடைய தலைமை, ஒவ்வொரு தமிழர் மனதிலும் எதிர்காலத்தை மாற்றும்வகையில் நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் (TVK) பெயரின் விளக்கம்

தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்ற பெயர் எங்கள் கட்சியின் அடிப்படை நோக்கத்தையும், சமூகத்திற்கான நமது அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த பெயர் மக்கள் நலத்தின் மூலம் வெற்றியை அடைவதற்கான நம் உறுதியை வரையறுக்கிறது.

"தமிழகம்"

தமிழகம் என்பது நம்முடைய மக்களுக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் குறிக்கும் சொல். தமிழகம் என்பது தமிழர்களின் அகம் என்றும், தமிழர்கள் வாழும் இடம் என்றும் சொல்லலாம். புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பதிற்றுப்பத்து என பல சங்ககால இலக்கியங்களில் இடம் பெற்ற சொல்.

"வெற்றி"

வெற்றி என்பது நேர்மறையான அர்த்தமும், அடர்த்தியும், அதிர்வும், வலிமையும் ஒருசேர கொண்ட சொல். என்றைக்கும் தன்னுடைய தன்மையை இழக்காத சொல். உற்சாகப்படுத்தும் சொல். அந்த சொல் தான் நமது கழகத்தின் மையச் சொல்லாகவும், மந்திரச் சொல்லாகவும் உள்ளது.

"கழகம்"

கழகம் என்பது படைபயிலும் இடம் என்று பொருள். அந்த வகையில் நம்முடைய இளஞ்சிங்கங்கள் பயிலும் இடம் தான் நம்முடைய கட்சி. அதுவே நம்முடைய கட்சியின் மூன்றாவது சொல்.

பெயரின் பின்புலம்

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயர், எங்கள் பாரம்பரியத்தை மதித்து, நவீன அரசியல் விழிப்புணர்வுடன் தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சமூகநீதியை நிலைநாட்ட எங்களின் முயற்சியை எடுத்துரைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, கீழே உள்ள வீடியோவைக் காணவும்.

கொள்கைகள் மற்றும் நோக்கம்

தமிழக வெற்றி கழகத்தின் ஐடி பிரிவு, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சமூக மாற்றத்தை முன்னெடுத்து, மக்கள் நலத்திற்காக உறுதியுடன் செயல்படுகிறது. எங்கள் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் தமிழகத்தில் சமத்துவம், நீதி, மற்றும் வாய்ப்புகள் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

த.வெ.க வின் கொள்கைகள்

சமூக நீதி

சமூக நீதி

அனைத்து சமூக தரப்புகளுக்கும் சமமாக இருந்திட, பாகுபாடின்றி அனைவருக்கும் சமவாய்ப்புகளை உருவாக்கவும் சமூக நீதி கொள்கைகளை முன்னெடுக்கின்றோம்.

தொழில்நுட்ப மேம்பாடு

தொழில்நுட்ப மேம்பாடு

நவீன தொழில்நுட்பங்களை மக்கள் நலப் பணிகளில் பயன்படுத்தி, அரசியல் செயல்பாடுகளை எளிமைப்படுத்தி, மக்கள் சேவையை மேம்படுத்த விரும்புகின்றோம்.

இளைய தலைமுறைக்கு வாய்ப்பு

இளைய தலைமுறைக்கு வாய்ப்பு

இளைஞர்களின் திறமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளித்து, சமூக மற்றும் அரசியல் அறிவை மேம்படுத்துகிறோம்.

த.வெ.க வின் கொள்கை தலைவர்கள்

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை மற்றும் சிந்தனை முன்மாதிரிகளாக அமைந்த சில முக்கியமான தலைவர்களின் வரலாற்றுப் பாதைகள் மற்றும் அவர்களின் தியாகம் நமக்கு ஒவ்வொரு நாளும் ஊக்கமாக உள்ளது. இவர்களின் கொள்கைகள், சாதனை மற்றும் சமூக சேவைகள் நமது கட்சியின் அடிப்படைக் கண்ணோட்டமாகும்.

நமது கொடியின் அடையாளம்

தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஒரு சின்னமாக மட்டுமல்ல, நமது சிந்தனைகளின் பிரதிபலிப்பாகவும் செயல்படுகிறது. இந்த கொடியின் அடையாளத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் தமிழ்நாட்டிற்காக கொள்கைகளை உருவாக்கும் உறுதியை உணருகிறார்கள்.

தஞ்சை மேற்கு மாவட்ட த.வெ.க வரலாறு

தஞ்சை மாவட்டம் எட்டு தொகுதிகளை உள்ளடக்கியது தமிழக வெற்றி கழகம் ஆரம்ப காலத்தில் ரசிகர் மன்றமாக துவங்கி மக்கள் இயக்கமாக செயல்பட்டு வந்தது இதில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவராக R . ரமேஷ் செயல்பட்டு வந்தார் நிர்வாக வசதிக்காக மூன்று மாவட்டங்களாக பிரித்து மத்திய மாவட்டம் வடக்கு மாவட்டம் தெற்கு மாவட்டம் என்று பிரிக்கப்பட்டது இதில் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவராக R. ரமேஷ் செயல்பட்டு வந்தார் கட்சி துவங்கிய போது நிர்வாக வசதிக்காக மீண்டும் தஞ்சை மாவட்டத்தை ஐந்து மாவட்டங்களாக கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு மத்திய என்று பிரிக்கப்பட்டது இதில் தஞ்சை மேற்கு மாவட்ட (ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி மட்டும்) செயலாளராக R.ரமேஷ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் இவரின் தலைமையில் ஒரத்தநாடு தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியங்களை பல்வேறு விதமாக பிரித்து செயல்பட்டு வருகின்றனர் ஒரத்தநாடு தொகுதியானது 58 ஊராட்சிகளையும் ஒரு பேரூராட்சியையும் உள்ளடக்கியது அதேபோல் திருவோணம் உட்பட்ட 20 ஊராட்சிகளும் தஞ்சைக்கு உட்பட்ட 18 ஊராட்சிகளும் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்குள் சேரும். இதில் மொத்த ஊராட்சி ஒன்றிணைத்து ஒரத்தநாடு கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு மத்திய ஒன்றியமாகவும் தெற்கு ஒன்றியம் மேற்கு திருவோணம் கிழக்கு திருவோணம் ஒரத்தநாடு பேரூராட்சி என்ற கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது இதற்கான ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது மற்றும் கிளை கழகங்கள் கட்சியின் கட்டமைப்புகளை மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள R.ரமேஷ் அவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். மற்றும் தஞ்சை மேற்கு மாவட்ட இளைஞரணி மேற்கு மாவட்ட மகளிர் அணி மேற்கு மாவட்ட வர்த்தக அணி மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மேற்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி என்று கட்டமைப்புகளை ஏற்படுத்தி கட்சி பணிகளை செய்து வருகின்றனர்.

Scroll to Top